என்னவோ நடக்கிறது:எல்லாம் பிடிக்கிறதுகாதலுக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் கவர்ச்சியிருக்கும்?.ரொம்பநாளாய் இருந்தும்
அதன் கவர்ச்சி குறையாமல் இருப்பதற்கு, யாது காரணமோ? காரணமே தேவையில்லாமல் ஒன்று நம்மோடு ஒட்டிக்கொள்கிறதுயென்றால் அது,காதலாக இருக்கலாம் என்பது நல்ல யூகம்.காதல் பாட்டு எழுதவே இப்படி இருக்கிறதென்றால்
காதலித்தால் எப்படியிருக்கும். பைத்தியம் பிடித்த மாதிரி இருக்கும

இசை: டி.இமான்
இயக்கம்: பிரபுசாலமன்
குரல்: மதுஸ்ரீ,கே.கே


பல்லவி

பெண்:

ஒரு களவாணி பயல நானும்
காதல் செஞ்சேனே -அவ(ன்)
நெனப்பால நெதமும் நூலாதேகம்
மெலிஞ்சேனே

போகையிலே திரும்பி ஒருதடவ
சிரிக்கையிலே கலஞ்சேன் வயசுப்புள்ள
வாடா ஏஞ்செல்லம் - ஒன்னபிரிஞ்சா நானில்ல

பக லிருக்கு இர விருக்கு
இவ முழுக்க முழுக்க
ஒனக்கு

சமிஞ் சிருக்கு அமஞ்சிருக்கு
தொட எதுக்கு தயக்கம்
இனிமேல

ஆண்:
ஒரு களவாணி கிளிய நானும்
காதல் செஞ்சேனே
அவ நெனப்பால கருகி பாலா
நாளும் திரிஞ்சேனே

போகையிலே திரும்பி ஒருதடவ
சிணுங்கையிலே கலஞ்சேன் மனசுக்குள்ள
வாடி ஏஞ்செல்லம் - ஒன்ன
பிரிஞ்சா நானில்ல

பய மெதுக்கு அத ஒதுக்கு
இவ(ன்) முழுக்க முழுக்க
ஒனக்கு

எட மிருக்கு எத மிருக்கு
தொடு தொணக்கி இருப்பேன்
துணிபோல

சரணம் 1
ஆனாலும் ஒனக்கு
அநியாயக் குறும்பு

பாவாடத் தளும்பா
இருப்பேனே விரும்பு

நீங்காம நெஞ்சுக்குள்ள
நெருப்ப ஏ(ன்) ஊத்துற

காங்கேயம் காளயென்ன
கரப்பானா மாத்துற

இடி இடிச்சா மழையிருக்கும்
இது எனக்கும் ஒனக்கும்
தெரியும்

செடி நனைஞ்சா சிலுசிலுக்கும்
சொகம் அணைக்கும் வரைக்கும்
சுருங்காது

சரணம் 2
ஓரளவு எனக்கு
அழகான இடுப்பு

சீரழிவு முழுக்க - ஓஞ்
சிரிப்போட சிறப்பு

வேரோட பூ பறிக்க
வருவாயா ராத்திரி

சூடான நீ எனக்கு
சுடிதாரு போக்கிரி

கதவடைச்சா எதுகிடைக்கும்?
அத நெனச்சி கெடந்தேன்
மயங்க

வலவிரிச்சா பசியெடுக்கும்
கொடு, வளையல் கொலுசு
நொறுங்காம

0 comments: