இன்னொரு முறையும் பரீட்சை

வேகமான பாடல் வியாதி மன்மதராசாவுக்குப்பிறகே அதிகமானது.எதேச்சையாக அமைந்த அவ்வெற்றிக்குப் பிறகு அதே மாதிரி வந்த பல பாடல் வாய்ப்பை வேண்டாமெனத் தவிர்த்துவிட்ட போதிலும், அந்தப் படத்து இயக்குனரே திரும்பவும் அதே மாதிரியான பாடலைக் கேட்க அன்பினாலும் அவர் என்மீது கொண்டிருக்கும் நம்பிக்கைக்காகவும் எழுதிய பாடலிது. அதே மாதிரி வெற்றிக்கிட்டுமா? மக்களாகிய நீங்களே அறிவீர்

இசை:தினா
இயக்கம்:சுப்ரமணியம்சிவா
குரல்: மாலதி,ஷங்கர்மகாதேவன்

பல்லவி
வேதாளம் முருங்கமரம்
ஏறுச்சு - வெட்க
தேவதையும் கூடவந்து
ஆடுச்சு

பாதாள பைரவன
தேடுச்சு - பட்டுப்
பாவாடையும் மோகங்கொண்டு
ஓடுச்சு

மதிய வெயிலாட்டம்
சூடு ரொம்ப கூடுச்சு
எளம அத்தனையும்
லீவெடுத்துப் போனிச்சு

தலகீழ புவிமேல
தானா தவிப்புல கொழம்பிடுச்சு

அழகான அழகால
ஏனோ மனக்கொடம் தளும்பிடுச்சு

வேதாள தேவதையே
பாதாள பைரவியே


சரணம் 1
சிங்கம்போல நானிருந்தேன்
சின்னப்புள்ள நீசிரிச்சே
அய்யோநான் நெலக்கொலஞ்சேன் - ஒம்
அழகால உருக்குலைஞ்சேன்

செங்க சூள போல என்ன
சின்னப்பையா நீஎரிச்சே
கண்ணாலயே நெருப்புவெச்சே - கணுக்
காலுகூட செவக்கவெச்சே

வீரத் தளும்ப நீ
வெடிக்கவெச்சே - என்ன
ஈரக்கொலையிலே
துடிக்கவெச்சே

காரக்கொழம்பு நீ
கரிக்கவெச்சே - என்ன
கூரப் பொடவையா
மடிக்கவெச்சே

வெவசாய நெலம்போல
வேர்வய மேனியில் பரப்பி வெச்சே

தலகாணி மகசூல
தாவணி சாக்குல நெரப்பிவெச்சே

சரணம் 2
பொங்கப் பான போல என்ன
பொட்டப்புள்ள நீ நெனச்சே
அங்கங்க கொதிக்கவெச்சே - என
அய்யய்யய்யோ இனிக்கவெச்சே

தங்கக்காசு போல என்ன
தந்திரமா நீபறிச்சே
உள்ளத்துல ஒளிச்சுவெச்சே - என
உசுரோடப் பழுக்கவெச்சே

மீசப்பொதையல
மொளைக்கவெச்சே - என்ன
மோசக்குழியிலே
வெதச்சுவெச்சே

ஆசக்கரைய நீ
ஒடைக்கவெச்சே - என்ன
பாசிப்பயிறுபோல்
வறுத்துவெச்சே

தலவாழ எலபோல
தாமரப்பூவையும் விரிச்சுவெச்சே

மலவாழப் பழம்போல
மனசராவுல உறிச்சுவெச்சே

0 comments: