லீ என்கிற லீலாதரன்

சடங்கும் ஜோதிடமும் மனிதகுலத்தை மிரட்டி வதைக்கும் பிசாசு போன்றன.இதை,விட்டாலொழிய மோட்சமோ முன்னேற்றமோ கிடையாது.இச்செய்தியை மிக நேர்த்தியாகப் படமெடுத்து ரசிகர்களின் இதயத்தில் "கொக்கி" திரைப்படம் மூலம் இடம் பிடித்தவர் இயக்குநர் பிரபுசாலமன். இவருடைய அடுத்த படமான
லீ'க்காக ஒரு பாடலை எழுதிக் கொடுத்தேன்.நம்பிக்கைத் ததும்பும் வரிகளை
எழுதிய மனநிலை உற்சாகமளித்தது.

இசை: D.இமான்
குரல்:கே.கே.,ஷாலினி

பல்லவி

ஜெனிலா ஓ ஜெனிலா
மெலினா ஓ மெலினா

ஒரு செண்டிமீட்டர்
நம்பிக்கையும் போதும்
ஒரு மில்லிமீட்டர்
புன்னகையும் போதும்

நிலவும் நீரும்
கடலும் காற்றும்
நமது பேரை அரங்கேற்றும்

சரணம் : ஒன்று

சுடாத சூரியன்
சுற்றாத பூமி
வ்ராத மாமழை
வற்றாத ஆறு

எங்கேயும் உண்டுயென்றால்
கண்டுபிடி - அதில்
எப்போதும் சந்தோச
கொட்டமடி

நாக்கு இருப்பது
சுவைப்பதற்கு - நீ
நம்பு நண்பா பொதுவாக

கைகள் இருப்பது
அணைப்பதற்கு - நீ
அன்பை பொழிடா அழகாக

சரணம் : இரண்டு

தொடாத வானவில்
தூங்காத பூக்கள்
கெடாத வாலிபம்
தோற்காத நாட்கள்

கண்ணீரை விட்டுவிட்டால்
உள்ளபடி - இரு
கைசேரும் அத்தனையும்
நல்லபடி

நேற்று நடந்ததை
நினைத்திருந்தால்
நாளை என்பதும் பிழையாகும்

காத்து கிடந்திடு
கிடைக்கும் வரை
யாவும் உலகினில் நலமாகும்

0 comments: