சொல்ல மறந்த சரணம்

பொறிக்காக எழுதிய பேரூந்தில் நீயெனக்கு ஜன்னலோரம் பாடலுக்கான சரணத்தை சொல்ல நினைத்து வேலை நிமித்தம் இத்தனை நாளாயிற்று.பரவாயில்லையா?

இயக்கம்: சுப்ரமணியம்சிவா
இசை: தினா
குரல்: மதுஸ்ரீ,மதுபாலகிருஷ்ணன்

சரணம்: ஒன்று

பயணத்தில் வருகிற
சிறுதூக்கம்
பருவத்தில் முளைக்கிற
முதல்கூச்சம்

பரீட்ச்சைக்குப் படிக்கிற
அதிகாலை
கழுத்தினில் விழுகிற
முதல்மாலை

புகைப்படம் எடுக்கையில்
திணறும் புன்னகை
அன்பே அன்பே நீதானே

அடைமழை நேரத்தில்
பருகும் தேநீர்
அன்பே அன்பே நீதானே

எனது வாசலில்
தினமும் காலையில்
கிடக்கும் நாளிதழ் நீதானே


சரணம்:இரண்டு

தாய்மடி தருகிற
அரவணைப்பு
உறங்கிடும் குழந்தையின்
குறுஞ்சிரிப்பு

செல்போன் சிணுங்கிட
குவிகிற கவனம்
அன்பே அன்பே நீதானே

பிடித்தவர் தருகிற
பரிசுப் பொருளும்
அன்பே அன்பே நீதானே

எழுதும் கவிதையில்
எழுத்துப் பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீதானே

0 comments: