பொறி

பொறி-திரைப்படம் பற்றிச் சொல்ல நிறைய உண்டு.திருடா திருடிக்குப் பிறகு, இயக்குநர் சுப்ரமணியம்சிவா இயக்கும் தமிழ்ப்படம்.இதிலும் இசை தினாதான். மன்மத ராசா மாதிரி பொறியிலும் துள்ளலிசைப் பாட்டுகள் இருக்கின்றன.என்றாலும்,எனக்கு எப்பவும் பிடிப்பது மென்மையான பாட்டுகளே! இதயம் தளும்புவது மாதிரி அமைகிற இசையை விட இதயம் குலுங்குற மாதிரி அமைகிற இசையை ஏன் அதிகமாக மக்கள் விரும்புகிறார்கள் என யாராவது சொன்னால் தேவலாம்?
பொறிக்காக எழுதிய காதல் பல்லவி


பேரூந்தில் நீயெனக்கு
ஜன்னல் ஓரம்
பின்வாசல் முற்றத்திலே
துளசிமாடம்

விடுமுறை நாட்களில்
பள்ளிக்கூடம்
விளையாட்டுப் பிள்ளைகளின்
செல்லக்கோபம்

ஆளில்லா நள்ளிரவில்
கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே


சரணங்களை அப்பறம் சொல்கிறேன்.தனக்கு எது எது பிடிக்கிறதோ அதுயாவும் காதலுக்கும் பிடிக்கும் என்று கனாக் காணும் கானமிது.
பார்க்கும் இடத்தில் எல்லாம் நின்னைபோல் பாவை, பாரதிக்கு மட்டும்தான் தெரிய வேண்டுமா என்ன ? இல்லாவிட்டாலும் இருப்பதுபோல கற்பனை செய்வதிலுள்ள இன்பதுக்கு ஈடு காதலித்தாலும்
கிடைக்காதென்கிறது ஒரு காகிதபட்சி.

1 comments:

said...

பிடித்ததெல்லாம் காதலனோ காதலியோ,
இருப்பதில் நியாயம் உண்டு.
அன்பு எல்லாவற்றிலும்
தெரிவது உண்மை.
முக்கியமாக ஜன்னலோரம்.

ஏன் நாளிதழ் கூடத்தான்.
நன்றாக இருக்கிறது யுக பாரதி.