சித்திரையில் என்ன வரும்?

சமீபத்தில், சிவப்பதிகாரம் படத்திற்காக என்னால் புனையப்பட்ட பாடலிது.
உங்களுக்காக ஒலிநாடா வெளிவரும் முன்பே பாடல் வரிகளை தந்திருக்கிறேன். படித்துவிட்டு அபிப்ராயத்தை இரண்டு வரிக்கு மேல் எழுதுவோர்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

இசை : வித்யாசாகர்
இயக்கம்:கரு.பழநியப்பன்
பாடியவர்கள்:கார்த்திக், சொர்ணலதா

பல்லவி

சித்திரையில் என்ன வரும்?
வெய்யில்
சிந்துவதால் வெக்கவரும்

நித்திரையில் என்ன வரும்?
கெட்ட
சொப்பனங்கள் முட்ட வரும்

கண்ணான கண்ணுக்குள்ளே
காதல் வந்தால்
உண்மையில் என்ன வரும்?

தேசங்கள் அத்தனையும்
வென்றுவிட்ட
தித்திப்பு நெஞ்சில் வரும்


சரணம் : ஒன்று

பாவி பயலால
இப்ப நானும்
படும் பாடுயென்ன

ஆவி பொகபோல
தொட்டிடாம
அவன் போறதென்ன

கண்ணுக்கு காவலா
சொப்பனத்தப் போடுற
கன்னத்துக்கு பவுடரா
முத்தங்கள பூசுற

நூலப்போல சீல - பெத்த
தாயப்போல காள
யாருபோல காதல் ,சொல்ல
யாருமே இல்ல

சரணம் : இரண்டு

கேணி கயிறாக
ஒங்கபார்வ
என்ன மேலிழுக்க

கூனி முதுகாக
செல்லவார்த்த
வந்து கீழிழுக்க

மாவிளக்கு போலநீ
மனசையும் கொளுத்துற
நாவிடுக்கு ஓரமா
நாணத்தப் பதுக்குற

யாரும் எறச்சிடாத - ஒரு
ஊத்துப்போல தேங்கி
ஆகிப்போச்சு வாரம்- இவ
கண்ணுமுழி தூங்கி


5 comments:

said...

//கண்ணான கண்ணுக்குள்ளே
காதல் வந்தால்
உண்மையில் என்ன வரும்?

தேசங்கள் அத்தனையும்
வென்றுவிட்ட
தித்திப்பு நெஞ்சில் வரும்//

//நூலப்போல சீல - பெத்த
தாயப்போல காள
யாருபோல காதல் ,சொல்ல
யாருமே இல்ல//

அருமையான வரிகள்.பாராட்டுக்கள்.

said...

பாடல் அருமை- வரிகள் புதுமை- முழுதும் இளமை- அத்தனையும் திறமை

said...

//மாவிளக்கு போலநீ
மனசையும் கொளுத்துற
நாவிடுக்கு ஓரமா
நாணத்தப் பதுக்குற//
//கண்ணுக்கு காவலா
சொப்பனத்தப் போடுற
கன்னத்துக்கு பவுடரா
முத்தங்கள பூசுற//
இந்த வரிகள் என்னை ரொம்ப கவர்ந்துருச்சுங்க. 2 வரிதான் எழுதியிருக்கேன். அனுதாபப்படவேண்டியது இல்லை... ;)

said...

Hello,

I am a huge fan of this song. It is the kind of song that makes you escape reality for a while and go to your special place. Thank you so much for the sublime lyrics.

However, this may seem like a very silly question, but what is the meaning of 'வெக்கவரும்'. I have been pondering over this for a long time and I am glad I chanced upon your blog. Please enlighten me.

Thank you

said...

The Girl,

//However, this may seem like a very silly question, but what is the meaning of 'வெக்கவரும்'. I have been pondering over this for a long time//

சித்திரையில் வெக்க வரும் . வெக்க என்பது வெப்பத்தை குறிக்கும் . சித்திரை மாதத்திலே வெயில் அதிகமாக அடிக்கும் அதனால் வெப்பம் அதிகமாக இருக்கும்.அதனையே கவிஞர் வெக்க என்று சொல்லியுள்ளார்.வெக்க என்பது பேச்சுவழக்கில் அதிகமாக பாவிக்கப்படும் வார்த்தை இது சில இடங்களில் புழுக்கம் என்று சொல்வார்கள்.In English "Its hot ".......lol